சில்லென்ற காற்றில் புற் செடிகள் நடனமிட..
சில்லென்ற காற்றில்
புற் செடிகள் நடனமிட
புல்லின் மேலுள்ள பனி துளியோ
செய்வதறியாது திகைக்கிறது...
பனித் துளியின் அதிகபட்ச ஆசையே
புற் செடியின் நுனியில் வீற்றிருப்பது தானே...
பனித்துளியே நானும் உன் ஜாதி தான்...
சில சமயங்களில் எனது ஆசையும் பேராசை தான்...
நிறைவேறா ஆசைகளையும்
தொட முடியா கனவுகளையும்
சுமந்து கொண்டு நானும் தள்ளாடி தவித்து தான் போகின்றேன்...
என் மனதினுள்ளே...
✍️ கற்பனைகளின் காதலி...



Comments
Post a Comment